Tuesday, July 1, 2014

1800 ஆண்டு பழமையான சுடுமண் புத்தர் சிலை கண்டுபிடிப்பு
------------------------------------------------------------------------------------------


திருச்சி மாவட்டம் காட்டுபுத்தூர் அருகிலுள்ள நத்தம் என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட புத்தர் சிலை, சாஸ்தா சிலை, தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சுடுமண் குடுவைகள் மற்றும் தட்டுகள் மணிகள் போன்றவை கண்டெடுக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி அரண்மனை போன்ற பெரிய கட்டிடம் ஒன்றின் சிதைவுகளும் கிடைத்துள்ளன.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரையிலான சுமார் 1800 ஆண்டுக் காலப் படிவங்கள் இங்கு இருப்பதாக அதனை ஆய்வு செய்துள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள், மதுரையை அடுத்துள்ள மான்குளம் பகுதியில் கிடைத்த பொறிப்புகளை ஒட்டியதாக இருக்கிறது என்றும் அதன் அடிப்படையில் இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.


--நன்றி இந்து நாளிதழ் 01.07.2014

No comments:

Post a Comment